சிவகங்கை: தென்கிழக்கு ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட கருப்பு கவுனி அரிசி, கிமு 2500-ம் ஆண்டுகளிலேயே இருந்துள்ளது. முதலில் இதை தடை செய்யப்பட்ட அரிசி (பார்பிடன் ரைஸ்) என்றே அழைத்தனர். சீனாவில் சாதாரண மக்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டு மன்னர் குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.
கிபி 1800-ம் ஆண்டுகளில் சீனர்கள் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தத் தொடங்கினர். தற்போது ஜப்பான் நாட்டில் மருந்தாகவும், உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் இந்த அரிசி இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் பண்டையக் காலத்தில் இருந்தே பயன்பாட்டில் இருந்து வருகிறது.
கருப்பு கவுனி 19-ம் நூற்றாண்டில்தான் தமிழகத்துக்கு வந்தது. தமிழர்கள் வடகிழக்கு மாநிலங்கள் வழியாக பர்மா நாட்டுக்குச் சென்று வணிகம் செய்தபோது கொண்டு வந்தனர். மேலும் மணிப்பூர், நாகாலாந்து பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட கருப்பு கவுனி அரிசி முதன்முதலில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள அனுமந்தங்குடியில்தான் சாகுபடி செய்யப்பட்டது.
தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் பரவலாகச் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த அரிசியை திருமணம் போன்ற முக்கிய விழா நாட்களில் பொங்கல், கிச்சடி, பாயாசம் போன்ற உணவு வகைகள் செய்வதற்குப் பயன்படுத்தி வருகின்றனர்.
» ஈழம்: சிங்கள பூமியாக்கப்படுகிறதா சிவபூமி?
» ராகுல் காந்தி தகுதியிழப்பு: விமர்சனங்களுக்கும் எல்லை உண்டு!
இந்த `சிவகங்கை கருப்பு கவுனி'க்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் வெளியான தகவல் மாவட்ட மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து குன்றக்குடி வேளாண்மை அறிவியல் நிலையத் தலைவர் செந்தூர்குமரன் கூறியதாவது: கருப்பு கவுனியில் புரதம் 3 கிராம், மாவுச் சத்து (கார்போ ஹைட்ரேட்) 138 கிராம், நார்ச்சத்து 3 கிராம், சோடியம் 4 மில்லி கிராம் உள்ளன. அதில் உள்ள `அந்தோசயனின்' என்ற தாவர நிறமி அதற்கான கூடுதல் கருப்பு நிறத்தை அளிக்கிறது.
சர்க்கரை இல்லாத `அந்தோசயனின்' நிறமியில் உள்ள ஆக்ஸிஜன், நோய்களுக்கு வித்திடும் `ஃப்ரி ரேடிக்கில்'களை மட்டுப்படுத்தி, திசுக்களை ஆராக்கியப்படுத்தும் `ஆன்டி ஆக்ஸிடெண்ட்'களை வளப்படுத்துகிறது. இந்தத் தனித்துவம் வெள்ளை அரிசியில் கிடையாது.
ஆராய்ச்சியாளர்கள் கருப்பு கவுனி அரிசியை முயல்களுக்கு அளித்து ஆய்வு செய்தபோது, நோய் எதிர்ப்புத்திறன் பெருகியது. மேலும் கருப்பு அரிசிச் சாறு சிகிச்சை மூலம் எலிகளின் கல்லீரல் செயல்திறனும் அதிகரித்துள்ளது.
இந்தக் கருப்பு கவுனி அரிசியில், கருப்பு அரிசி, கவுனி அரிசி, கருப்பு கவுனி அரிசி, செட்டிநாடு கவுனி அரிசி, கருப்பு புட்டரிசி, நாட்டுக் கருப்புக்கவுனி அரிசி உள்ளிட்ட வகைகள் உள்ளன. தமிழக அரசு கருப்பு கவுனி அரிசிக்கு புவிசார் குறியீடு பெற முயற்சி எடுத்துள்ளது. இதன்மூலம் கருப்பு கவுனி அரிசிக்கான தனித்துவம் உறுதி செய்யப்படும்.
சிவகங்கை மாவட்டத்தில் கருப்பு கவுனி அரிசி சாகுபடி பரப்பு அதிகரிக்கும். சர்வதேச, தேசிய அளவிலான சந்தையில் மதிப்பு அதிகரிப்பதோடு நல்ல விலையும் கிடைக்கும். இதன்மூலம் சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு அதிகப் பயன் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
கல்லல் வேப்பங்குளம் விவசாயி சவுந்தர்ராஜன் கூறுகையில்,
`மருத்துவ குணம் கொண்ட கருப்பு கவுனி அரிசியை எங்கள் கிராமத்தில் 6 பேர் இயற்கை விவசாயமாக சாகுபடி செய்கிறோம். ஒரு கிலோ அரிசியை ரூ.140-க்கு விற்பனை செய்கிறோம்.
6 அடி வளர்வதால் அதிக சத்தான வைக்கோல் கால்நடைகளுக்குத் தீவனமாகக் கிடைக்கும். நோய், பூச்சிகள் தாக்கம் பெரிதாக இருக்காது. உற்பத்திச் செலவும் குறைவு.
புவிசார் குறியீடு கிடைத்தால் உலக அளவில் இதன் தேவை அதிகரித்து சாகுபடி பரப்பு அதிகரிக்கும். இதன்மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும்' என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago