சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டத்தில் 3, 4, 5 ஆகிய வழித்தடங்களில் நீட்டிப்பு தொடர்பாக சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய மூன்று நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. மாதவரம்-சிறுசேரி வரை (45.8 கி.மீ.) 3-வது வழித்தடத்திலும், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரை (26.1 கி.மீ. ) 4-வது வழித்தடத்திலும், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை (47 கி.மீ) 5-வது வழித்தடத்திலும் என118.9 கி.மீ. தொலைவில் பணிகள் நடைபெறுகின்றன. இதுதவிர, இந்த வழித்தடங்களை நீட்டிக்கவும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
கலங்கரைவிளக்கம் - பூந்தமல்லி வரை அமைக்கப்படும் 4-வது வழித்தடத்தை பரந்தூர் வரை 50 கி.மீ. தொலைவுக்கு நீட்டிக்க ஆலோசிக்கப்பட்டது.
5-வது வழித்தடம்: இதுதவிர, மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடத்தில், திருமங்கலத்தில் இருந்துமுகப்பேர், அம்பத்தூர் வழியாகஆவடி வரை 17 கி.மீ தொலைவுக்கு நீட்டிக்கவும், மாதவரம் -சிறுசேரி சிப்காட் வரை 3-வது வழித்தடத்தில், சிறுசேரி முதல்கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பதுதொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த 3 வழித்தடங்களில் நீட்டிப்பு தொடர்பாக சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி, ஒப்பந்தப்புள்ளி அழைப்பு கடந்த செப்டம்பரில் விடுக்கப்பட்டது. இதில், 8 பொறியியல் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
இந்நிலையில், இந்த மூன்று வழித்தடங்களில் நீட்டிப்பு தொடர்பாக சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: திருமங்கலம் - ஆவடி வரை சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யஎல் அண்ட் டி ஐடெல் நிறுவனத்துக்கும், பூந்தமல்லி -பரந்தூர் வரைவழித்தடத்தில் ஆய்வு செய்வதற்கு ஆர்வீ அசோசியேட்ஸ் நிறுவனத்துக்கும், சிறுசேரி-கிளாம்பாக்கம் வரை வழித்தடத்தில் ஆய்வு செய்ய சிஸ்ட்ரா நிறுவனத்துக்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்கள் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் பணியை தொடங்கியுள்ளன. 3மாதங்களில் விரிவான அறிக்கையை தயார் செய்து அளிப்பார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago