சென்னை: பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தரராஜனுக்கு மதுரையில் சிலைஅமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: திரைப்படப் பின்னணிப் பாடகர், கலைமாமணி டி.எம்.சவுந்தரராஜன் நூற்றாண்டில், அவர் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் மந்தைவெளி வெளிவட்டச் சாலைக்கு `டி.எம்.சவுந்தரராஜன் சாலை’ என்று பெயரிடப்பட்டுள்ளது மகிழ்ச்சி தருகிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான `செம்மொழியான தமிழ் மொழியாம்' என்ற பாடலில் இறுதியாக அவரின் குரலும், பங்கேற்பும் இருந்தது.
மதுரையில் அவர் பிறந்து, வாழ்ந்த பகுதியில் உருவச் சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்வைத்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago