தேவைக்கு அதிகமாக வாங்கி வெளிச்சந்தையில் விற்பதைத் தடுக்க மண் வள அட்டை; பரிந்துரை அடிப்படையிலே உரம் விற்பனை: புதிய நடைமுறை அடுத்த ஆண்டு முதல் அறிமுகம்

By டி.செல்வகுமார்

உர விற்பனையில் எல்லா நிலைகளிலும் முறைகேட்டைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன. அந்த வரிசையில், விவசாயிகள் தேவைக்கு அதிகமாக உரம் வாங்கி வெளிச்சந்தையில் விற்பதைத் தடுக்க ஒவ்வொரு விவசாயிக்கும் எத்தனை ஏக்கர் நிலம் இருக்கிறது, அந்த நிலத்தின் வளம் என்ன என்பதை ஆய்வு செய்து அனைத்து விவசாயிகளுக்கும் மண் வள அட்டை வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக தமிழக வேளாண்மைத் துறை, மாநிலத்தில் உள்ள விவசாயிகளிடம் உள்ள நிலங்களைத் துல்லியமாகக் கணக்கிட வருவாய்த் துறையில் இருந்து நிலம் தொடர்பான விவரங்களைச் சேகரித்துள்ளது. யார் யாருக்கு எத்தனை ஏக்கர் நிலம் இருக்கிறது என்ற தகவல்கள் கணினியில் தொகுக்கப்பட்டுள்ளன. அத்துடன் அந்த தகவல்கள் அனைத்தும் ஆதார் அட்டைகளுடன் இணைக்கப்பட்டுவிட்டன. மண் வளத்தின் அடிப்படையில் ஒரு ஏக்கருக்கு எவ்வளவு உரம் வழங்க வேண்டும் என்று வேளாண்மைத் துறை பொதுவான பரிந்துரைகளை அளித்துள்ளது.

இதுகுறித்து வேளாண்மைத் துறை உயர் அதிகாரி கூறியதாவது: தமிழ்நாட்டில் 81 லட்சத்து 60 ஆயிரம் விவசாயிகள் உள்ளனர். இதில், 10% பேர் விவசாயத்தை விட்டுவிட்டு போயிருப்பார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் தமிழக அரசு சார்பில் விவசாய நிலங்களை ஆய்வு செய்து 67 லட்சம் விவசாயிகளுக்கு மண் வள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், நாடு முழுவதும் 2017-2018, 2018-2019 ஆகிய இரண்டு ஆண்டுகளில் விவசாய நிலத்தை முழுமையாக ஆய்வு செய்து அனைத்து விவசாயிகளுக்கும் மண் வள அட்டை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் மண் வள ஆய்வுப் பணியை முடித்து, 70 லட்சம் விவசாயிகளுக்கு அட்டை வழங்கப்படவுள்ளது.

கிரிட் சாம்பிளிங்

25 ஏக்கர் ஒரு குரூப் என்ற அடிப்படையில் மண் வளம் ஆய்வு செய்யப்படுகிறது. இது ‘கிரிட் சாம்பிளிங்’ என அழைக்கப்படுகிறது. ஒரு கிராமத்தில் 500 ஏக்கர் நிலம் இருக்கிறதென்றால், அங்கு 25 ஏக்கர் வீதம் மொத்தம் 20 இடங்களில் மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும். அதன் முடிவு 500 ஏக்கர் நிலத்துக்கும் பொருந்தும். மண்ணைப் பொறுத்தவரை 16 வகையான மண் உள்ளது. நெற் பயிராக இருந்தால் இரண்டரை ஏக்கர் நிலத்துக்கு 120 கிலோ தழைச்சத்து வேண்டும். மண்ணில் 40 கிலோ தழைச்சத்து இருந்தால் அந்த நிலத்துக்கு 80 கிலோ தழைச்சத்து போட்டால் போதுமானது. மண் வளத்தை ஆய்வு செய்யாவிட்டால், அந்த விவசாயி 120 கிலோ தழைச்சத்தையும் பயன்படுத்துவார். மண் வளத்தை ஆய்வு செய்துவிட்டால் உரத்தின் பயன்பாடு குறையும். மகசூலும் அதிகரிக்கும்.

தமிழக அரசின் மண் வள அட்டையைப் பெற்றுள்ள விவசாயிகளில் வெறுமனே 20 சதவீதம் பேர்தான் அந்த அட்டையைப் பயன்படுத்தி, அதில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைக்கேற்ப உரம் போட்டு சாகுபடி செய்கின்றனர். ஆனால், மத்திய அரசு மண் வள அட்டை வழங்கிய பிறகு, அதனடிப்படையில்தான் உரம் வாங்க முடியும். அப்போது மண் வள அட்டையில் குறிப்பிடப்படும் பரிந்துரைகளைச் செயல்படுத்தியாக வேண்டும். இந்த நடைமுறை அடுத்த ஆண்டுமுதல் அமலுக்கு வரும். தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு சோதனை அடிப்படையில் 5 மாவட்டங்களில் செயல்படுத்த வேளாண்மைத் துறை திட்டமிட்டுள்ளது. இந்த நடைமுறை அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

51 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்