புதுச்சேரி: அமித்ஷா தலைமையில் தேச பாதுகாப்பு மாநாட்டில் புதுச்சேரி உள்துறை அமைச் சர் நமச்சிவாயம் பங்கேற்றார். புதுச்சேரி சட்டப்பேரவையில் கல்வித் துறை மீதான மானியக்கோரிக்கை விவா தம் நடக்கிறது. நேற்றைய விவாதத்தில் துறை அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்காதது தொடர்பாக திமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, ‘அமித்ஷா தலைமையில் நடைபெறும் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க அமைச்சர் பெங்களூரு சென்றுள்ளார்’ என்று தெரிவித்தனர்.
இதுபற்றி புதுவை உள்துறை அமைச்சர் தரப்பில் விசாரித்தபோது, "தென் மாநிலத்துக்கான போதைப் பொருள் கடத்தல் மற்றும் தேச பாது காப்பு குறித்த பிராந்திய மாநாடு பெங்க ளூருவில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடந்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் மாநில உள்துறை அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் புதுவை மாநிலம் சார்பாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டார். முன்னதாக அமித்ஷாவை சந்தித்து அமைச்சர் நமச்சிவாயம் பேசினார். தொடர்ந்து நடந்த மாநாட்டில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு போன்ற பல்வேறு ஒழுங்கு நடவடிக்கையில் புதுச்சேரி சிறந்து விளங்குவதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்" என்று தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago