சென்னை: டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்து பேசினார்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டமசோதாவை, நான்கு மாதங்களுக்குப் பிறகு தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். மேலும், இது தொடர்பாக சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டமசோதா நேற்று மீண்டும் நிறைவேற்றப்பட்டது. விரைவில் இந்த மசோதா ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது. இந்த முறை ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தாக வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், நேற்று காலை ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று மாலை சந்தித்தார்.
» ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் நிறைவேற்றம்: அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு
» இந்திய அணிக்கு தேர்வாகியுள்ள மாற்றுத்திறனாளி மாணவி - நிதியுதவி கோரி மதுரை ஆட்சியரிடம் மனு
அப்போது, ஆன்லைன் சூதாட்ட தடை சட்டமசோதா தொடர்பாக ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், இன்று இரவு வரை டெல்லியில் தங்கும் ஆளுநர், ஆன்லைன் மசோதா குறித்து மத்திய அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலாசிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago