சென்னை/புதுக்கோட்டை: தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை நேற்று சிறைபிடித்துள்ள நிலையில், அவர்களை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தில் இருந்து நேற்று 2 விசைப்படகுகளில் 12 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் நேற்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து, காங்கேசன்துறை கடற்படை தளத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர்களது 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்: இலங்கை கடற்படையால் 23-ம் தேதி 12 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது 2 விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்டுஉள்ள சம்பவத்தை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 28 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுஉள்ளதோடு, 4 படகுகளும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதை தடுத்து நிறுத்த மத்திய அரசு தூதரக முயற்சிகள் எடுத்து வரும் சூழலிலும், மீனவர்கள் மீதான தாக்குதல், கைது நடவடிக்கைகள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன.
» உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி - இந்திய ஜோடிக்கு வெள்ளிப் பதக்கம்
» ஆஸி.க்கு எதிரான தோல்வியை இந்திய அணி மறந்துவிடக்கூடாது: முன்னாள் கேப்டன் கவாஸ்கர் எச்சரிக்கை
பாக் ஜலசந்தி பகுதியில் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை பறிக்கும் வகையிலான இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இதுதொடர்பாக உறுதியான மற்றும் காலவரையறைக்குட்பட்ட ஒரு திட்டத்தை உடனடியாக வகுக்க வேண்டும். தற்போதைய நிலவரப்படி தமிழகத்தைச் சேர்ந்த 104 மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கையால் விடுவிக்கப்பட்ட 5 மீன்பிடிப் படகுகளும் இன்னும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவில்லை. 16 இந்திய மீனவர்கள் ஏற்கெனவே இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
எனவே தாங்கள் இதில் தலையிட்டு, 28 மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அண்ணாமலை கடிதம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கடிதம் எழுதியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
39 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago