ஊதிய உயர்வு அரசாணையை அமல்படுத்த கோரி சென்னையில் அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்

By செய்திப்பிரிவு

சென்னை: ஊதிய உயர்வு அரசாணையை அமல்படுத்த கோரி அரசு மருத்துவர்கள் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத்தலைவர் செந்தில், பொதுச் செயலாளார் ரவிசங்கர், தலைமை நிலைய செயலாளர் சந்திரசேகர் உட்பட 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அறிவிக்கப்பட்ட அரசாணை 354-ன்படி, பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற அறிவிப்பில் மருத்துவர்கள் சங்கங்களுக்குள் இருவேறு கருத்துநிலவி வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசுமருத்துவர்கள் சங்கத்தினர், அரசாணை 293-ஐ அமல்படுத்தகோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அரசுத்தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, ‘அரசாணை 293-ஐ அமல்படுத்த அரசு தயாராகஉள்ளது.

தகுதி வாய்ந்த மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம். நிபுணத்துவம் அடிப்படையில் ஊதிய உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் நேற்று மாலை கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்