பொதுவிநியோகத் திட்டம் மூலமாக: மாடித் தோட்டத்தை ஊக்குவிக்கும் கேரளம் - தமிழகத்திலிருந்து செல்லும் நாற்றுகள்

By எம்.நாகராஜன்

காய்கறி தேவையில் பெரும்பங்கு தமிழகத்தையே சார்ந்திருக்கும் கேரளம், ஒவ்வொரு வீட்டிலும் மாடித் தோட்டம் அமைத்து காய்கறி உற்பத்தியில் மக்களை ஊக்கப்படுத்தி வருகிறது.

அரிசி, காய்கறி, பால், ஆடு, மாடு, கோழி, முட்டை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தேவைக்கு தமிழகத்தை கேரளம் சார்ந்திருக்கும் சூழல் நிலவி வருகிறது. தமிழகத்தில் பிரபலமான ஒட்டன்சத்திரம் சந்தையிலிருந்து 60 சதவீதம் காய்கறிகள் கேரளத்துக்கு அனுப்பப்படுகிறது.

இரு மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகளாலும், கேரளத்தில் அவ்வப்போது நடைபெறும் போராட்டங்களின் போதும் போக்குவரத்து முடங்கும் நிலை ஏற்படும். இதனால் தமிழகத்தில் இருந்து செல்லும் பொருட்கள் நிறுத்தப்படுவதால் கேரள மக்களும், வியாபாரிகளும் பாதிக்கப்படுவர்.

இந்நிலையில், பொது விநியோகத் திட்டம் மூலம் அம்மாநில மக்களுக்கு, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுடன் வீட்டுத் தோட்டத்துக்குத் தேவையான காய்கறி நாற்றுகளை மானிய விலையில் விநியோகித்து வருகிறது கேரள அரசு.

காய்கறிகள் ஏற்றுமதி

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே தீபாலபட்டி கிராமத்தைச் சேர்ந்த இயற்கை உர உற்பத்தியாளர் என்.ஜெயப்பிரகாஷ் என்பவர்தான் கேரளத்துக்கு தேவையான காய்கறி நாற்றுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார்.

பிஎஸ்சி பட்டதாரியான இவர், பல ஆண்டுகளாக பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டு, படிப்படியாக மண்புழு மூலம் இயற்கை உர உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார். இவரது பண்ணையில் இயற்கை உரம் மூலம் உற்பத்தியாகும் காய்கறி செடிகள் ‘poly grow’ பைகள் மூலம் கேரளத்துக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

இதுகுறித்து அவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது: கேரள அரசு வீட்டுக்கு வீடு காய்கறி உற்பத்தி செய்வதை ஊக்குவித்து வருகிறது. இயற்கை உரம், தென்னை நார் கழிவு கொண்ட 10 கிலோ எடையுடன் கூடிய ஒரு நாற்றின் விலை ரூ.130 என நிர்ணயிக்கப்பட்டு, 50 சதவீத மானியத்தில் பொதுமக்களுக்கு வழங்குகிறது. சராசரி ஒரு குடும்பத்துக்கு தேவையான தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், அவரை, பீர்க்கங்காய், புடலங்காய், பூசணி உள்ளிட்ட 10 வகையான செடி, கொடி வகை நாற்றுகள் ரூ. 650 என்ற விலையில் விநியோகிக்கப்படுகிறது.

70 நாட்களில் விளைச்சல் தரும் கத்தரி 6 மாதங்களுக்கு பலன் தருவதோடு, சராசரியாக ஒரு வாரத்துக்கு ஒரு கிலோ வரை விளைச்சல் இருக்கும். இதைப் போலவே பிற காய்கறிச் செடிகள், பராமரிப்புக்கு ஏற்ப விளைச்சல் தரும். இப்பயிர்கள் ஒரு குடும்பத்தின் தேவையை நிச்சயம் பூர்த்தி செய்து விடும்.

40 சதவீத உற்பத்தி

மாநிலம் முழுவதும் பல லட்சம் பேர் இத்திட்டத்தில் இணைய வேண்டி பதிவு செய்து காத்திருக்கின்றனர். கேரள மக்களின் மொத்த காய்கறி தேவையில் 40 சதவீத உற்பத்தி வீட்டுத் தோட்டங்கள் மூலம் கிடைத்துள்ளதாக அம்மாநில அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் என்றார்.

தமிழகத்திலும் தோட்டக்கலைத் துறை மூலம் மாடித் தோட்டம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் இதுகுறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லை, வழங்கப்படும் விதைகள் மரபணு மாற்றப்பட்டவையாக உள்ளன. தண்ணீர் தட்டுப்பாடு, நோய் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக மக்கள் தெரிவிக் கின்றனர்.

தோட்டக்கலைத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘தமிழகத்தில் பெரு நகரங்களில் மட்டும் தொடங்கப்பட்ட இத்திட்டம் படிப்படியாக இதர மாவட்டங்களுக்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இதன் அவசியத்தை மக்கள் உணரும் நிலை வரும்’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்