நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே ஜேடர்பாளையம் சரளைமேட்டைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் துரைசாமி (57). இவர் அப்பகுதியில் வெல்லம் தயாரிப்பு ஆலை நடத்தி வருகிறார். ஆலையின் ஒரு பகுதியில் வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்டோர் தங்கும் குடிசைகள் உள்ளன.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் மர்ம நபர்கள் தொழிலாளர் குடிசைகளுக்கு தீ வைத்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற கரூர் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இதில், 5 குடிசைகள் மற்றும் 3 டிராக்டர்கள் சேதம் அடைந்தன.
மேலும், குடிசைகளில் தொழிலாளர்கள் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. எனினும், தீப்பற்றிய டிராக்டரை துரைசாமி எடுக்க முயன்றபோது அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இதுபோல, ஜேடர்பாளையத்தில் இருந்து நல்லூர் செல்லும் சாலையில் உள்ள பழனிசாமி(55) என்பவரது குடிசைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். குடிசையிலிருந்தவர்கள் உடனடியாக வெளியேறித் தப்பினர். இதில், வீட்டிலிருந்த பொருட்கள் மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கம் கருகியது.
» சென்னையில் இஸ்ரேலியப் பட விழா
» தமிழக பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
மேலும், வடகரையாத்தூர் முன்னாள் ஊராட்சித் தலைவர் வேலுசாமி வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். சத்தம் கேட்டு அவர் வெளியே வந்தபோது, மர்ம நபர்கள் தப்பினர். இதில், அவரது வீட்டின் ஜன்னல் உள்ளிட்ட சில இடங்கள் சேதமடைந்தன.
தகவல் அறிந்து 3 இடங்களுக்கும் சென்ற நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங், எஸ்பி ச.கலைச்செல்வன் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும், பதற்றத்தைத் தணிக்க பரமத்திவேலூர் டிஎஸ்பி கலையரசன் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவங்கள் தொடர்பாக ஜேடர்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 11-ம் தேதி ஜேடர்பாளையம் அருகே கரப்பாளையத்தைச் சேர்ந்த நித்யா என்ற பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து, கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். அந்த பரபரப்பு ஓய்வதற்குள் மீண்டும் குடிசைகளுக்குத் தீ வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
14 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago