விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களை மிளகாய் மண்டலமாக அறிவித்ததற்கு விவசாயிகள் வரவேற்பு

By இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களை மிளகாய் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளதை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.

பச்சை மிளகாய் உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், வரமிளகாய் (வத்தல்) உற்பத்தியில் இந்தியா முதலிடத்திலும் உள்ளது. இந்தி யாவில் ஆந்திரா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்திரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் மிளகாய் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

தமிழகத்தில் 44,610 ஹெக்டேரில் 2,939 மெ.டன் மிளகாய் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் அக்டோபர், நவம் பர் மாதங்களில் நாற்றாங்கல் நடவு செய்யப்பட்டு மார்ச் இறுதியில் அறுவடை செய்யப்படுவது வழக்கம். விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், விருதுநகர், வெம்பக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், காரியா பட்டி, திருச்சுழி, நரிக்குடி பகுதி களில் குண்டுமிளகாய் அதிகமாக பயிரிடப்பட்டு வருகின்றன.

சம்பா ரகங்களை விட மானாவாரி ரகங்களே அதிகம். ரகங்களைப் பொருத்தவரை கே1,கே2 போன்ற உயர் விளைச்சல் சம்பா ரகங்களும், நாட்டு முண்டு ரகங்களும், வீரிய ஒட்டு ரகங்களும் பயிரிடப்படுகின்றன. செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் இதன் பருவமாகும்.

இந்நிலையில், நேற்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் மிளகாய் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விருதுநகர் விவசாயி களிடையே வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலை வர் விஜயமுருகன் மற்றும் விவ சாயிகள் கூறுகையில், விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் வரை மிளகாய் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், ஹைபிரிட் ரகங்கள் வந்த பின்னர், விதை எடுக்க முடியாத காரணத்தால், மிளகாய் சாகுபடி செய்து வந்த விவசாயிகள் பலர் மக்காச்சோளம் பயிருக்கு மாறிவிட்டனர்.

ஆனாலும், விருதுநகர் மாவட் டத்தில் தற்போது சுமார் 20 ஆயிரம் ஏக்கர் வரை மிளகாய் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாரம்பரிய மிளகாய் உற்பத்தியில் விருதுநகருக்கு முதலிடம்தான். சம்பா, குண்டுரகம் மட்டுமின்றி பல்வேறு நிறுவனங்களின் பெயர் களில் மிளகாய் ரகங்கள் தற்போது சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. விருதுநகர் மாவட்டத்தை மிளகாய் மண்டலமாக தமிழக அரசு அறி வித்துள்ளது வரவேற்புக்குறியது.

அதே நேரத்தில், மிளகாய் எண் ணெய் தயாரித்தல், மதிப்புக் கூட்டுப் பொருள்கள் தயாரித்தல் போன்ற தொழில் நுட்பங்களையும் புகுத்த வேண்டும். மிளகாய் விலை வீழ்ச்சி ஏற்படும்போது விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் வகையில் அரசே மிளகாய்க்கு கட்டுப்படியான விலையை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய முன்வர வேண்டும். மேலும், மிளகாய் உற்பத்தியைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

பதப்படுத்தும் ஆலை தொடங்க வாய்ப்பு: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோரைப்பள்ளத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி ராமர் கூறியதாவது: ராமநாதபுரத்தை மிளகாய் மண்டலமாக அறிவித் துள்ளது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.

இயற்கை விவசாயிகளுக்கு ரூ.5 லட்சத்துடன் நம்மாழ்வார் விருது, வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று பயிற்சி அளிப்பது என அறிவித்துள்ளது, என்னைப் போன்ற இயற்கை விவசாயி களுக்கு ஊக்கமளித்துள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி போன்ற வெளிநாடுகளுக்கு மிளகாய் ஏற்று மதி செய்து வரும் என்னைப் போன்ற விவசாயிகளின் நலன் கருதி, கமுதி பகுதியில் குடோன் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.

மிளகாய் கொள்முதல் விலையை அதிகரித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க அரசு உறு துணையாக இருக்க வேண்டும் என்று கூறினார். சிக்கலைச் சேர்ந்த தமிழக வைகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் எம்.எஸ்.கே.பாக்கிய நாதன் கூறியதாவது: மாவட்டத்தில் 30,000 ஹெக்டேருக்கு மேல் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மிளகாய் பயிரிட்டு வருகின்றனர்.

பல நூறு ஆண்டு காலமாக ராமநாதபுரம் மாவட் டத்தில் முண்டு மிளகாய் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த மிளகாய்க்கு பன்னாட்டு வர்த்தக அளவில் வரவேற்பு உள்ளது. இம்மிளகாய்க்கு கடந்த மாதம் மத்திய அரசு புவி சார் குறியீடு வழங்கியது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தை மிளகாய் மண்டலமாக தமிழக அரசு அறிவித் துள்ளது. இது விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தால் மாவட்டத்திலேயே மிளகாய் பதப்படுத்தும் தொழிற் சாலை, மிளகாயிலிருந்து மதிப்பூட் டப்பட்ட பொருட்கள் தயார் செய்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வது போன்ற தொழில்கள் தொடங்க வாய்ப்புள்ளது.

இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். தமிழக அரசுக்கு விவசாயிகள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE