சென்னை: சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் 5 ரயில் நிலையங்களில் நின்று செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன அதிவேக ரயில்களை, ரயில்வே அமைச்சகம் 2019-ல் அறிமுகம் செய்தது. இந்த ரயிலில் இன்ஜின் தனியாக இல்லாமல் ரயிலுடன் இணைந்து இருக்கும். ரயிலில் தானியங்கி கதவுகள், ஏ.சி, வைஃபை, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ தகவல் வசதிகள், பயோ-கழிவறைகள் என பல நவீன வசதிகள் உள்ளன. சென்னையில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்த வகையான ரயில் பெட்டிகள் தயார் செய்யப்பட்டன.
இந்தியா முழுவதும் தற்போது 10 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டுவருகிறது. இதன் முதல் சேவை டெல்லி - வாரணாசி வழித்தடத்தில் தொடங்கப்பட்டது. 5-வது சேவை சென்னை - பெங்களூரு - மைசூரு வழித்தடத்தில் தொடங்கப்பட்டது. இந்நிலையில் சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ரயில் சென்னை சென்ட்ரல், காட்பாடி, சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட 5 ரயில் நிலையங்களில் நின்று செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் இருந்து கோவைக்கான பயண நேரம் 6 முதல் 6.30 மணி நேரமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ரயிலின் வேகம் மணிக்கு 80 முதல் 90 கி.மீட்ட வரை இருக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago