சென்னை: நம் நாட்டுக்கு தேவையான செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகைராக்கெட்டுகள் மூலம் விண்ணில்நிலைநிறுத்துகிறது. இதில் வணிகரீதியான செயற்கைக்கோள்கள் பெரும்பாலும் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலமே விண்ணில் ஏவப்பட்டன.
பிஎஸ்எல்வி ராக்கெட்டில் அதிகபட்சம் 1,750 கிலோ வரை மட்டுமே செயற்கைக்கோள்களை ஏவ முடியும். ஆனால், ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் 4,000 கிலோ வரை செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும்.
இதையடுத்து வர்த்தக செயற்கைக்கோள்களை ஜிஎஸ்எல்வி மார்க்-3 (எல்விஎம்-3) ராக்கெட் மூலம் செலுத்தும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது. அதன்படி இங்கிலாந்தை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 72 செயற்கைக்கோள்களை ஜிஎஸ்எல்வி மூலமாக செலுத்துவதற்கு இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் கடந்தஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம்மேற்கொண்டது.
அதில் முதல்கட்டமாக 36 செயற்கைக்கோள்கள் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்தஅக்டோபர் 23-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப் பட்டன.
» ரூ.640 கோடி மதிப்பில் கொப்பரை தேங்காய் கொள்முதல்
» நூறு நாள் வேலை திட்டத்தின்கீழ் ரூ.6,600 கோடியில் இயற்கைவள மேலாண்மை பணிகள்
அதைத் தொடர்ந்து 2-வது கட்டமாக 36 செயற்கைக்கோள்கள் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் வாயிலாக ஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்துமார்ச் 26-ம் தேதி காலை 9 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இதற்கான ஒன்வெப் நிறுவனத்தின் செயற்கைக்கோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு ஏற்கெனவே வந்து சேர்ந்துவிட்டன. தற்போது ராக்கெட் பாகங்கள் ஒருங்கிணைப்பு உட்படஇறுதிகட்ட பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago