சென்னை: "சென்ற ஆண்டு அறிவிக்கப்பட்ட பல திட்டங்களே இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. விவசாயிகளின் எதிர்பார்ப்புகளையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றாத, அவர்களுக்கு முழு நம்பிக்கை அளிக்காத வேளாண் நிதிநிலை அறிக்கையாகவே உள்ளது" என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக அரசு தேர்தல் அறிக்கையில் வேளாண் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக சுமார் 90 அறிவிப்புகள் வெளியிட்டு இருந்தது. அவற்றில் எந்தவிதமான செயல் திட்டமும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. திமுக அரசு, விவசாயிகள் வாங்கும் வேளாண் கூட்டுறவு வங்கி கடன்கள் தள்ளுப்படி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்து இருந்தது. ஆனால் எந்தவிதமான தள்ளுபடி அறிவிப்பும் இல்லாதது விவசாயிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும், வருத்ததையும் அளித்து இருக்கிறது.
நெல்லுக்கு 2,500-ம், கரும்பிற்கு ரூ.4000-மும் வழங்கப்படும்; மற்றும் வேளாண் உற்பத்தி பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை அளிப்போம் என்று தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்து இருந்தார்கள். ஆனால் எந்த விளைப் பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதாரவிலை அறிவிக்காதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.சன்னரக நெல்லுக்கு ரூ.100, பொது ரகத்திற்கு ரூ.75 ஊக்கத் தொகை அறிவித்து இருப்பது போதுமானது இல்லை. மேலும் விவசாயிகளுக்க பெருமளவு பயன்தரும் கூட்டுறவு பயிர்க்கடன் வழங்க அளிக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை. நீர்பாசன வாய்கால்கள்; மூலம் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்ல, தூர்வார 5 கோடி ஒதுக்கியிருப்பது போதுமானதல்ல.
வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கு வழங்குப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் மானிய தொகையின் அளவு மிக குறைவாக இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழகத்தில் அதிகமான பகுதி வறட்சியான, வானம் பார்த்த பூமியாக இருக்கிறது. இப்பகுதியில் விவசாய பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கக்கூடிய எந்த அறிவிப்பும் இல்லை. விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவரும் நெல்மணிகளையும், கொள்முதல் செய்த நெல்மணிகளையும் மழை, வெள்ளத்தில் நனையாமல் பாதுகாக்கவும், சேமிக்கவும், புதிய கிடங்குகள் அமைக்கவும் எந்த திட்டமும் இல்லை. கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகையை திரும்ப அளிக்க கூடிய நம்பிக்கையை அரசு அளிக்கவில்லை.
» போட்டித் தேர்வர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?
» நகைச்சுவை நடிகரும், மிமிக்ரி கலைஞருமான கோவை குணா காலமானார்
புதிய நீர்தேக்கம் மற்றும் புதிய தடுப்பணை கட்டும் திட்டம், நீர்;மேலாண்மை குறித்து எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. வேளாண்மையை லாபகரமாக மாற்றுவதற்கான அறிவிப்பு எதுவும் ;இல்லை. விவசாயிகளுக்கு நேரடியாக எந்த பயனும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை. சென்ற ஆண்டு அறிவிக்கப்பட்ட பல திட்டங்களே இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. விவசாயிகளின் எதிர்பார்ப்புகளையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றாத, அவர்களுக்கு முழு நம்பிக்கை அளிக்காத வேளாண் நிதிநிலை அறிக்கையாகவே உள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago