திருநெல்வேலி: தமிழகத்தில் முதன்முறையாக திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனத்தில் சூரிய சக்தியில் இயங்கும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும் 2 நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த இரு வாகனங்களில் சூரிய சக்தியுடன் இயங்க கூடிய சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனங்களை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் நேற்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது: இதன் மூலம் நெடுஞ்சாலையில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களையும் கண்காணிக்கவும் முடியும். மேலும் முக்கிய பிரமுகர் பாதுகாப்பு பணிக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார். தனிப்பிரிவு ஆய்வாளர் ராஜேஷ், தொழில்நுட்ப பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago