தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023: மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டா மாப்பிள்ளையாகலாம் - அமைச்சர் சுவாரஸ்யம்

By செய்திப்பிரிவு

சென்னை: மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டா மாப்பிள்ளையாகலாம், தங்க சம்பா சாப்பிட்டா தங்கமாக இருக்கலாம் என்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் 2023 - 2024 இன்று (மார்ச் 21) காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது திமுக அரசு தாக்கல் செய்யும் மூன்றாவது வேளாண் பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்:

* 60,000 சிறு குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வேளாண் கருவிகள் தொகுப்பு ரூ.15 கோடி செலவில் வழங்கப்படும்

* பருவத்திற்கு ஏற்ற பயிர் மற்றும தொழில்நுட்பம் பற்றிய தகல்களை உழவர்களுக்கு தெரிவிக்க கிராம வேளாண் முன்னேற்ற குழுக்கள் அமைக்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு

* நெல்லுக்குப் பின்னான பயிர் சாகுபடிக்கு மானியமாக ரூ.24 கோடி வழங்கப்படும்.

* நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் புதிதாக சிறுதானிய மண்டலங்கள் உருவாக்கப்படும்

* கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை சாகுபடி செய்து மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும்.

இவ்வாறாக அறிவிப்புகளை வெளியிட்டுவந்த அமைச்சர், மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டா மாப்பிள்ளையாகலாம், தங்க சம்பா சாப்பிட்டா தங்கமாக இருக்கலாம் என்று கூற அவையில் உறுப்பினர்கள் உற்சாகமாக குரல் எழுப்பினர். சபாநாயகரும் அதனை ஆமோதித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்