சென்னை: ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் ரூ.82 கோடி நிதியில் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் 2023 - 2024 இன்று (மார்ச் 21) காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது திமுக அரசு தாக்கல் செய்யும் மூன்றாவது வேளாண் பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்:
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2504 கிராம ஊராட்சிகள் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்திற்கு ரூ.230 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் இலவச பம்புசெட்டுகள், பண்னை குட்டைகள் அமைக்கப்படும். தென்னங்கன்று இல்லாத குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வழங்கப்படும்.
» தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2023 | விவசாயிகள் சந்திக்கும் சவால்கள்: அமைச்சர் பன்னீர்செல்வம் உரை
தமிழ்நாடு சிறுதானிய இயக்கம்
ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் ரூ.82 கோடி நிதியில் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு சிறு தானிய இயக்கம் 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும். 50 ஆயிரம் ஏக்கரில் சிறு தானிய சாகுடி செய்யப்படும். சிறு தானிய திருவிழாக்கள் நடத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago