சென்னை: விவசாயிகள் எண்ணற்ற சவால்களை சந்தித்து வருவதாக வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை இன்று (மார்ச் 21) அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இது திமுக அரசு தாக்கல் செய்யும் மூன்றாவது வேளாண் பட்ஜெட் ஆகும். பட்ஜெட் தாக்கல் செய்து அமைச்சர் பேசுகையில், "இயற்கையோடு நடத்தும் கண்ணாமூச்சி ஆட்டமாக வேளாண்மை துறை உள்ளது. விவசாயிகள் எண்ணற்ற சவால்களை சந்தித்து வருகின்றனர். இதன் காரணமாக வறட்சியை தாங்கி பிடிக்கும் ரகங்கள் மற்றும் வெள்ளத்திற்கு தாக்கு பிடிக்கும் ரகங்களை பயிர் செய்ய வேண்டும்.
அனைத்து சத்துகளும் உணவின் மூலம் கிடைக்க வேண்டும். எனவே வேளாண்மை உற்பத்தியை பெருக்குவது அவசியம். கடந்த ஆண்டு மொத்த சாகுபடி பரப்பு 1.93 லட்சம் எக்டேர் அதிகரித்து 63.48 லட்சம் எக்டேராக சாகுபடி பரப்பு உள்ளது." இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago