வைரலான புலிவால் போஸ்ட்: ட்ரோலர்ஸ், ஹேட்டர்களுக்கு ரியாக்ட் செய்த செல்லூர் ராஜு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் மூத்த தலைவருமான செல்லூர் ராஜு, நாட்டின் தேசிய விலங்கான புலி ஒன்றின் வாலை பிடித்து நிற்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி இருந்தது. பலரும் அதனைப் பகிர்ந்து தங்கள் கருத்துகளை தெரிவித்திருந்தனர். புலிவாலை பிடித்து நிற்கும் படத்தை செல்லூர் ராஜுதான் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், அதை பலரும் ட்ரோல் செய்த நிலையில் ட்ரோலர்ஸ் மற்றும் ஹேட்டர்ஸ்களுக்கு என பிரத்யேக பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

“வணக்கம் trollers and haters. உங்கள் கருத்துக்கு நன்றி. இது உண்மையில் என்னை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்றாலும், நீங்கள் இப்போது புத்துணர்ச்சியாக உணர்கிறீர்கள் என்று நம்புகிறேன். இந்த ஈடுபாட்டை உங்களை சுற்றியுள்ள சமூக பிரச்சனைகளில் காட்டினால் நாடும் வீடும் வளம்பெறும்” என செல்லூர் ராஜு அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசியல் களத்தில் தனக்கே உரிய பாணியில் கருத்துகள் சொல்வதால் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பரவலான மக்களால் அறியப்படுகிறார். சமயங்களில் அவரது செயல்களும் சமூக வலைதளத்தில் கவனம் பெறும். அந்த வரிசையில் புலிவாலை பிடித்து நிற்கும் அவரது புகைப்பட போஸ் கவனம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்