அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக அண்ணாமலை முடிவெடுக்க முடியாது: ஹெச்.ராஜா கருத்து

By செய்திப்பிரிவு

மதுரை: அதிமுக - பாஜக கூட்டணி குறித்த முடிவை மாநில தலைவர் அண்ணாமலை எடுக்க முடியாது என அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

டெல்லி செல்வதற்காக மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜகவில் கூட்டணி குறித்த முடிவை மாநிலத் தலைவரோ, மற்ற நிர்வாகிகளோ எடுக்க முடியாது.

ஆலோசனை, வழிமுறைகளைத் தெரிவிக்கலாம். கூட்டணி குறித்த முடிவை எடுப்பது பாஜகவின் ஆட்சிமன்றக் குழு மட்டுமே. எனவே, அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு கட்சியின் ஆட்சிமன்றக் குழுதான் உரிய பதில் அளிக்க முடியும்.

சமீபத்தில் கோவைக்கு சென்றிருந்தேன். அப்போது, பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கூறுவதாக எழும் கருத்து குறித்து, அக்கட்சியைச் சேர்ந்த செ.மா.வேலுச்சாமி, பொள்ளாச்சி ஜெயராமனிடம் கேட்டேன். அவர்களுக்கு எந்தவிதமான எதிர் கருத்துகளும் இல்லை. ஒரு சில தலைவர்கள் சொல்லியிருக்கலாம். அதற்கெல்லாம் பதிலளிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்