ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம்: 5 ஆண்டுகளில் ரூ.351 கோடி அபராதம் வசூல்

By செய்திப்பிரிவு

சென்னை: தெற்கு ரயில்வேயில் கடந்த 5 ஆண்டுகளில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த 73 லட்சத்து 63 ஆயிரம் பேர் சிக்கியுள்ளனர். இவர்களிடமிருந்து ரூ.350.88 கோடிஅபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணிப்பவர்களை தடுக்க ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஓடும் ரயில்களில் அதிகாரிகள், ஆர்பிஎஃப் வீரர்கள் இணைந்து அதிரடி சோதனை மேற்கொண்டு, டிக்கெட் இன்றி பயணிப்பவர்களை பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர்.

இருப்பினும், ரயில்களில் டிக்கெட் இன்றி பயணிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்கள் மூலமாக அபராதத் தொகையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் கடந்த 5 ஆண்டுகளில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்த73 லட்சத்து 63 ஆயிரம் பேர்சிக்கியுள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.350.88 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேஅதிகாரிகள் கூறும்போது, ‘‘கடந்த2018-19 நிதியாண்டில் ரூ.58.97 கோடி அபராதத் தொகை வசூல்செய்யப்பட்டது. நடப்பாண்டில்இதுவரை ரூ.108.13 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரயில்களில் டிக்கெட்இன்றி பயணம் மேற்கொண்ட 73 லட்சத்து 63 ஆயிரம் பேர்சிக்கியுள்ளனர். இவர்களிடம் இருந்து ரூ.350.88 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்