போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தத்தை ஓய்வூதியத்தில் அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழில் நுட்ப பணியாளர் முன்னேற்ற பேரவை சார்பில் மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் உள்ளிட்டோருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தத்தின்படி, அடிப்படை ஊதியத்தை பே மேட்ரிக்ஸில் பொருத்தி 5 சதவீத உயர்வு அளித்து வழங்கப்பட வேண்டும். இந்த உயர்வானது, கடந்த 2019-ம் ஆண்டு செப்.1 முதல் 2022-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி வரை ஓய்வுபெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற மற்றும் மரணமடைந்த தொழிலாளர்களுக்கும் பொருந்தும்.
ஆனால், அவர்களுக்கு ஊதிய ஒப்பந்த பலன்களை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவது வேதனையளிக்கிறது.
எனவே, மேற்கூறிய காலகட்டத்தில் ஓய்வுபெற்ற, மரணமடைந்த தொழிலாளர்களுக்கு 14-வது ஊதிய ஒப்பந்த அடிப்படையில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் அனுப்பப்பட்ட பதிலில், “14-வது ஊதிய ஒப்பந்தத்தை ஓய்வூதியத்தில் அமல்படுத்துவது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago