திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகராட்சி குப்பை கிடங்கில் இருந்து 10-வது நாளாக நச்சுப்புகை வெளியேறு வதால் பொதுமக்களுக்கு சுவாசப் பிரச்சினை அதிகரித்துள்ளது.
திருவண்ணாமலை ஈசான்ய லிங்கம் அருகே சுமார் 25 ஏக்கரில் குப்பை கிடங்கு உள்ளது. இங்கு, திருவண்ணாமலை நகராட்சி யில் சேகரிக்கப்படும் குப்பை கொட்டப்படுகிறது. இதில் பிளாஸ்டிக் கழிவுகளும் அடங்கும். கிடங்கில் மலைபோல் குப்பை குவிந்துள்ளது.
இதிலிருந்து வெளி யேறும் துர்நாற்றத்தை சுவாசித்துக் கொண்டே, கிடங்கை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் வாழ்கின்றனர். மேலும், கிரிவலப் பாதையில் கிடங்கும் உள்ள தால், துர்நாற்றத்தை சுவாசிக்க வேண்டிய கட்டாயம் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், குப்பை கிடங்கு கடந்த 10-ம் தேதி அதிகாலை முதல் எரியத் தொடங்கியது. குப்பைகள் தானாக எரிவதற்கு சாத்தியம் இல்லாததால், விஷமிகள் தீவைத்தாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.
குப்பை கிடங்கில் இருந்து நச்சுப்புகை வெளியேறி அவலூர் பேட்டை சாலை, போளூர் சாலை, வேலூர் சாலை, காஞ்சி சாலை மற்றும் தென்றல் நகர் பகுதிகளை சூழ்ந்துள்ளன. தொடர்ந்து, 10-வது நாளாக நேற்றும் நச்சுப்புகை வெளியேறி வருவதால், இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு சுவாச பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
சுகாதாரச் சீர்கேடு: சர்க்கரை, ரத்த அழுத்தம், ஆஸ்துமா பாதிப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களின் நிலை மோசமாக உள்ளன. நச்சுப் புகையை சுவாசிப் பதால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குப்பை கிடங்கில் பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். நகராட்சி அதிகாரிகளும் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். ஆனால், குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், திருவண்ணாமலை நகராட்சியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கரோனா தொற்று மீண்டும் பரவி உள்ள நிலையில், குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் நச்சுப்புகை என்பது, மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
எனவே, குப்பை கிடங்கில் பற்றி எரியும் தீ மற்றும் வெளியேறும் நச்சுப் புகையை முழுமையாக கட்டுக் குள் கொண்டு வர நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க நகர பொதுமக்கள் வலி யுறுத்தியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago