திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே கொடை யாஞ்சி பகுதியில் பாலாற்றின் குறுக்கே ரூ.2 கோடி செலவில் கட்டப்பட்ட தரைதள நீர்த்தேக்க தடுப்புகளை சரி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் நந்தி மலையில் பாலாறு உற்பத்தியாகிறது. அம்மாநிலத்தில் 93 கிலோ மீட்டர் பாய்ந்தோடி வரும் பாலாறு, ஆந்திர மாநிலத்தில் 33 கிலோ மீட்டரை கடந்து புல்லூர் என்ற பகுதியில் இருந்து தமிழகத்துக்குள் நுழைந்து தமிழ்நாட்டில் 222 கிலோ மீட்டர் தூரம் பயணித்து சதுரங்கப்பட்டணத்தில் கடலில் சங்கமிக்கிறது.
கர்நாடகா, ஆந்திரா மாநிலங் களை காட்டிலும் தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் இந்த பாலாற்று தண்ணீரை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர். நதிநீர் ஒப்பந்தத்தை மீறி ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே 22 தடுப்பணைகளை கட்டியுள்ளன. இதனால், தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்தது.
தமிழ்நாட்டில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டவேண்டும் என பாலாறு பாதுகாப்பு சங்கம் மற்றும் தமிழக விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பாலாற்று தண்ணீர் போதிய அளவுக்கு தமிழ்நாட்டுக்கு வராததால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் வறட்சியான மாவட்டமாகவே காணப்படுகிறது. பாலாற்றை பாதுகாக்க ஒரு தடுப் பணையாவது கட்ட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதனைத்தொடர்ந்து, திருப் பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி பகுதியில் பாலாற்றின் குறுக்கே கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தரைதள நீர்த்தேக்கம் கட்டப்பட்டது.
இதற்காக, அப்போதைய அரசு ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்தது. இந்த தரைதள நீர்த்தேக்கமானது, உரிய பராமரிப்பு இல்லாததால், கடந்த ஆண்டு பெய்த கனமழையால் பாலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளப்பெருக்கால் கொடையாஞ்சியில் கட்டப்பட்ட தரைதள நீர்த்தேக்க தடுப்புகள் உடைந்து சேதமடைந்தன.
வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த தரைதள நீர்த்தேக் கத்தை சீர் செய்து அதன் தடுப்பு களை உயர்த்திக்கட்ட வேண்டும் என தமிழக விவசாயிகள் மற்றும் பாலாறு பாதுகாப்பு சங்கத்தினர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தமிழக அரசோ அதற்கான நடவடிக்கையை இதுவரை எடுக்காததது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘‘வாணியம்பாடி நகரின் குடிநீர் தேவையை கொடையாஞ்சியில் கட்டப்பட்ட தரைதள நீர்த்தேக்கம் மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், தரைதள நீர்த்தேக்கத்தின் தடுப்புகள் சேதமடைந்துள்ளதை அரசு அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளது வேதனையளிக்கிறது. தினசரி, லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் இப்பகுதியில் இருந்து உறிஞ்சி நகர மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது.
எனவே, தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் கொடையாஞ்சி பகுதியில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைதள நீர்த்தேக்க தடுப்பை சரி செய்து உயர்த்திக்கட்டி, நீரை சேமிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக் கிறோம்’’ என்றனர்.
- ந.சரவணன்
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago