அரக்கோணம்: தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. பெண்கள் கூட போதைப் பொருட்களுக்கு அடிமையாகி விட்டதாக தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் திருப்பாற்கடல் கிராமத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா தனது பிறந்த நாளை முன்னிட்டு நேற்றும் முன்தினம் இரவு சுவாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தேமுதிக ஆரம்பித்து சில ஆண்டு களிலேயே, எதிர்க்கட்சி என்ற நிலையை அடைந்தது. எனவே, வெற்றி.தோல்வி என்பது எல்லாம் சகஜம். தற்போது, கட்சி பலவீனமாக உள்ளது. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதை பலப்படுத்தி வருகிறேன்.
மேலும், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர் குலைந்துள்ளது. போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளன. அதனால், குற்றங்களும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இளைஞர்கள், மாணவர்கள் என போதைக்கு அடிமையாகியது போக, பெண்களும் கூட மது, கஞ்சா உட்பட போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். திமுகவில் வாரிசு அரசியல் தொடர்ந்து வருகிறது.
இதனால், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக ஆனது மட்டுமின்றி அடுத்த பதவிகளுக்கு செல்வார் என்பதெல்லாம் ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்வது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் உள்ளது" என்றார்.
அப்போது, தேமுதிக மாநில துணை செயலாளர் சுதீஷ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மனோகரன் உட்பட பலர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago