மார்ச் 26-ல் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல்; மார்ச் 27-ல் வாக்கு எண்ணிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் வரும் மார்ச் 26-ம் தேதி நடைபெறும் என்றும், இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை ( மார்ச் 18) தொடங்கும் என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, அதிமுக துணைப் பொதுச் செயலாளரும், தேர்தல் ஆணையாளருமான நத்தம் விசுவநாதன், கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளரும், தேர்தல் ஆணையாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பு: அதிமுக சட்ட திட்ட விதி 20 (அ); பிரிவி-2ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு "கட்சியின் பொதுச் செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்" என்ற விதிமுறைக்கு ஏற்ப கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பிற்கான தேர்தல் கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி நடைபெறும்.

கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பிற்குப் போட்டியிட விரும்பும் கட்சியினர் மேற்கண்ட கால அட்டவணையின்படி, தலைமைக் கழகத்தில் கட்டணத் தொகை ரூ.25,000 (ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம்) செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்று, கட்சி சட்ட விதி-20அ;பிரிவு-1,(a),(b),(c) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி தங்களுடைய விருப்ப மனுக்களைப் பூர்ச்சி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கலாம்.

கட்சியின் பொதுச் செயலாளர், பொறுப்பிற்கான தேர்தல் முறையாக நடைபெறுவதற்கு, கட்சியின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்