சென்னை: தேனி மக்களவைத் தொகுதியில் தனது வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில், எம்.பி ரவீந்திரநாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அவரது வேட்புமனுவில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளார். எனவே, தேனி தொகுதியில் அவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க கோரி தேனி தொகுதி வாக்காளரான மிலானி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் எம்பி, ரவீந்திரநாத் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது அவரிடம், நிறுவனம் ஒன்றின் இயக்குநராக இருந்தது, வங்கியில் கடன் வாங்கியது மற்றும் தேர்தலின்போது வாக்களர்களுக்கு பணம் அளித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது உள்ளிட்டவை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.
அனைத்து கேள்விகளுக்கும் சாட்சி கூண்டில் ஏறி பதிலளித்த ரவீந்தரநாத், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவடைந்ததை அடுத்து, விசாரணையை ஏப்ரல் 11-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago