மதுரை: தாம்பரத்தில் இருந்து மார்ச் 18 முதல் மார்ச் 23 வரை புறப்பட வேண்டிய தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா ரயில் மற்றும் மார்ச் 19 முதல் மார்ச் 24 வரை நாகர்கோவிலில் இருந்து புறப்படும் நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா ரயில் ஆகியவை நெல்லை- நாகர்கோவில் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என்று மதுரை கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம் கோட்டப் பகுதியில் மேலப்பாளையம் - நாங்குநேரி ரயில் நிலையங்கள் இடையே இரட்டை ரயில் பாதை இணைப்பு பணி நடைபெற இருக்கிறது. இதையொட்டி, புதன்கிழமை முதல் மார்ச் 22 வரை பகல் நேர ரயில் போக்குவரத்தில் சில மாற்றம் செய்யப்படும் என, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தவிர்க்க முடியாத காரணத்தால் அந்த அறிவிப்பில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி தாம்பரத்தில் இருந்து மார்ச் 18 முதல் மார்ச் 23 வரை புறப்பட வேண்டிய தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா ரயில் (20691) மற்றும் மார்ச் 19 முதல் மார்ச் 24 வரை நாகர்கோவிலில் இருந்து புறப்படும் நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா ரயில் (20692) ஆகியவை நெல்லை- நாகர்கோவில் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இந்த ரயில் நெல்லையில் இருந்து வழக்கமாக புறப்படும் நேரமான மாலை 5.05 மணிக்கு புறப்படும். மேலும் திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில்கள் (22627/ 22628) மார்ச் 19 முதல் மார்ச் 24 வரை நெல்லை - திருவனந்தபுரம் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி ரயில் நெல்லையில் இருந்து வழக்கமாக புறப்படும் நேரமான மதியம் 2.30 மணிக்கு புறப்படும்.
» பெத்தநாயக்கன்பாளையம் அருகே மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு
» 10 ஆண்டுகளுக்கு மேலான ஆதார் அட்டையை புதுப்பிப்பது அவசியம்: இணையவழியில் 3 மாதங்களுக்கு இலவசம்!
மார்ச் 22 அன்று தாம்பரத்தில் இருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் வாரம் மும்முறை சேவை விரைவு ரயில் (22657) மற்றும் நாகர்கோவிலில் இருந்து மார்ச் 23 அன்று புறப்படும் தாம்பரம் வாரம் மும்முறை சேவை ரயில் (22658) ஆகியவை விருதுநகர் - நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இது போன்று மார்ச் 23-ல் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் வாராந்திர சேவை விரைவு ரயில் (12667) மற்றும் மார்ச் 24 அன்று நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் வாராந்திர சேவை விரைவு ரயில் (12668) விருதுநகர் - நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது, என, மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
59 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago