சேலம்: சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தை அடுத்த சின்னகல்வராயன் மலை கிராமத்தில் இடி, மின்னலுடன் பெய்த மழையின்போது, மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.
பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள சின்னகல்வராயன் மலைப்பகுதியில் வியாழக்கிழமை திடீரென இடி, மின்னலுடன் கூடிய கோடை மழை பெய்தது. இந்நிலையில், மழையின்போது சின்னகல்வராயன் மலையில் உள்ள கீழ்நாடு கிராமம் அருணா என்ற பகுதியைச் சேர்ந்த குழந்தையன் (48) என்ற விவசாயியை மின்னல் தாக்கியது. அதில் சுருண்டு விழுந்து அவர் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து, பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அன்புசெழியன், வருவாய் ஆய்வாளர் அசோக், கிராம நிர்வாக அலுவலர் ஆனைமுத்து ஆகியோர் நேரில் சென்று ஆய்வு நடத்தி, உயிரிழந்த விவசாயி குழந்தையன் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த விவசாயி குழந்தையனுக்கு, ராமாயி என்ற மனைவியும், திருமணமான இரு மகன்கள், திருமணமாகாத சசிகலா என்ற மகளும் உள்ளனர். > தமிழகத்தில் மார்ச் 19 வரை மழை வாய்ப்பு: இடி, மின்னலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அரசு அறிவுறுத்தல்
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago