குடிநீர் வரி, கட்டணங்களை மார்ச்.31-க்குள் செலுத்த வேண்டும்: சென்னை குடிநீர் வாரியம்

By செய்திப்பிரிவு

சென்னை: பொதுமக்கள் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரியினையும், குடிநீர் கட்டணங்களையும் மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் செலுத்திட வேண்டும் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்திற்கு நுகர்வோர்கள் செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரியினையும், குடிநீர் கட்டணங்களையும் மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் செலுத்திட வேண்டும்.

வரி செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்து பகுதி அலுவலகங்கள், பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்கள் அனைத்து வேலை நாட்களிலும், சனிக்கிழமைகளிலும் மற்றும் மாத இறுதி ஞாயிற்றுக்கிழமையான 26-ம் தேதியன்றும், காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இயங்கும்.நுகர்வோர்கள் இவ்வசதியினைப் பயன்படுத்தி மேல்வரி, இணைப்பு துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கைகளை தவிர்த்திடுமாறு கேட்டுக்கொள்கிறது. மேலும், நுகர்வோர்கள் தங்களது நிலுவைத் தொகையினை இணையதளம் வாயிலாக செலுத்துவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login> என்ற வலைத்தளத்தைப் பயன்படுத்தி கிரெடிட் கார்டு (Credit Card), டெபிட் கார்டு (Debit Card) மற்றும் நெட் பேங்கிங் (Net Banking), UPI மூலமாகவும் மற்றும் வசூல் மையங்களில் உள்ள QR குறியீடு போன்ற பிற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர்கள் தங்களின் குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்தலாம். பகுதி அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்களில், காசோலை மற்றும் பணமாக வரி செலுத்தலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்