அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்னும் சற்று நேரத்தில் (மாலை 4 மணிக்கு) விசாரணைக்கு வருகிறது.
அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க கூறி எம்எல்ஏ வெற்றிவேல் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் அடங்கிய அமர்வு முன் இன்று (திங்கட்கிழமை) காலை விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்க மறுத்ததோடு, மனுதாரர் எம்எல்ஏ வெற்றிவேல் நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாகக் கூறி அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து எம்எல்ஏ வெற்றிவேல் மதியம் 1.30 மணியளவில் மீண்டும் மேற்முறையீடு செய்தார்.
இம்மேல் முறையிடு மனு நீதிபதிகள் ராஜிவ் சக்தர், அப்துல் குத்துஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் இம்மனு மீதான விசாரணை மாலை 4 மணிக்கு தொடங்கும் என்று கூறியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago