சென்னை: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் 12 அரசுத் துறை அலுவலகங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புப் போலீஸார் நடத்திய திடீர் சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது.
திருவண்ணாமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் அலுவலக கோப்புகள், ஆவணங்கள், பீரோக்களில் பதுக்கி வைத்திருந்த பணம் ரூ.8.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது
செய்யாறு சார் பதிவாளர் அலுவலகத்தின் வெளிப்புற கேட்டை பூட்டி விட்டு நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத பணம் ரூ.2.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆவண எழுத்தர் நரசிம்மனிடம் இருந்தும் அலுவலகத்தில் இருந்தும் கணக்கில் வராத ரூ.2.34 லட்சத்தை போலீஸார் கைப்பற்றினர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், தாரமங்கம் சார் பதிவாளர் அலுவலகம், நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம், தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சார் பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் பண்ணாரியில் போக்குவரத்துத் துறை சோதனைச்சாவடியிலும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஜூஜூவாடி சோதனைச் சாவடியிலும் போலீஸார் சோதனை நடத்தினர்.
கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று மதியம் சுமார் 3 மணி முதல் இரவு வரை சோதனை நீடித்தது. வீடு கட்டுவதற்கு வரைபடம் தயார் செய்து மாநகராட்சியில் அனுமதி பெற்றுதரும் கடலூர் புதுப்பாளையம் மற்றும் கோண்டூரில் இயங்கும் 4 தனியார் நிறுவனங்களிலும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திருச்சி தென்னூர் மின் வாரிய அலுவலகத்தில் ரூ.14 ஆயிரம், ஜெயங்கொண்டம் சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.6 ஆயிரம், திருவாரூர் நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல துணை மேலாளர் அலுவலகத்தில் ரூ.1 லட்சம், நாகை வட்டாட்சியர் அலுவலகத்தில் ரூ.21 ஆயிரம், மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.50,700, தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் ரூ. 34,800, கும்பகோணத்தில் வணிகவரித் துறையின் பறக்கும் படை வாகனத்தில் ரூ. 17,630, கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் 15,550, தரகம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் ரூ.10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் மேற்பார்வையாளர் தியாகராஜனின் காரில் ரூ.1 லட்சம், அலுவலகத்தில் ரூ.42 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்தனர். பொதுமக்களில் ஒருவர்வைத்திருந்த தங்க நாணயத்தையும் போலீஸார் கைப்பற்றினர்.
இதுபோல், நாகர்கோவில் வடசேரி வி.ஏ.ஓ. அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார், கிராம நிர்வாக அலுவலர் சித்ராவிடம் இருந்து கணக்கில் வராத ரூ.17,863 பணத்தை பறிமுதல் செய்தனர். சித்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திருப்பூர் நெருப்பெரிச்சலில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகத்தில், தரகர்கள் மற்றும் பத்திர எழுத்தர் உள்ளிட்டோரிடம் இருந்து ரூ. 61 ஆயிரம், வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.1 லட்சத்து 48 ஆயிரம், நீலகிரி மாவட்டம் குன்னூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1 லட்சத்து 26 ஆயிரம், கோவை துடியலூரில் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.13,500, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்திலும் ரூ.60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ரூ. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரொக்கத்தைக் கைப்பற்றிய போலீஸார் சில அலுவலர்களின் வீடுகளுக்கும் சென்று சோதனை நடத்தினர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம், தேனி சார் பதிவாளர் அலுவலகம், திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
பரமக்குடி மின்வாரிய உதவிப் பொறியாளர் (தெற்கு) அலுவலகத்தில் மின் கட்டணம் வசூலிக்கும் அலுவலர்களிடம் கணக்கில் வராத ரூ.19,000 பணம் கைப்பற்றப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே புல்லுக்கோட்டை அரசு நெல் கொள்முதல் நிலையத்திலும் சோதனை நடந்தது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago