முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசின் 2023-24-ம் நிதியாண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கை வரும் 20-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. மறுநாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

இ்ந்நிலையில், கடந்த 9-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், நிதிநிலை அறிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, நிதிநிலை அறிக்கை தயாரிப்பில் நிதித் துறைச் செயலர் நா.முருகானந்தம் தலைமையிலான குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு தலைமைச் செயலகம் வந்தார். அவரை, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், நிதித் துறைச் செயலர் நா.முருகானந்தம் உள்ளிட்டோர் சந்தித்து, ஆலோசனை நடத்தினர்.

ஏறத்தாழ ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த ஆலோசனையின்போது, நிதிநிலை அறிக்கை, திட்டங்களுக்கான அறிவிப்புகளை இறுதி செய்ததா தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்