விழுப்புரம் | அன்புஜோதி ஆசிரமத்தில் இருந்து காணாமல் போன தாய், மகன் இருக்குமிடம் தெரிய வந்துள்ளது: மேலும் 14 பேர் எங்கே?

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: விழுப்புரம் அருகேயுள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து காணா மல் போன தாய், மகன் இருக்குமிடம் தெரிய வந்துள்ளதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர்களில் மற்ற 14 பேர்கள் குறித்து தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.

விழுப்புரம் அருகே குண்டலபுலி யூரில் இயங்கி வந்த அன்பு ஜோதிஆசிரமத்தில் மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலி யல் வன்கொடுமை செய்தது, ஆசிரமத்தில் இருந்த ஜாபருல்லா உள்ளிட்ட 16 பேர் காணாமல் போயிருப்பது என அடுக்கடுக்கான பல்வேறுதிடுக்கிடும் தகவல்கள் அம்பலமா னது. இதனை தொடர்ந்து ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், ஆசிரம பணியாளர்கள் 8 பேர் கெடார் போலீஸாரால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். சிபிசிஐடி கூடுதல் கண்காணிப்பாளர் கோமதி தலை மையில் 4 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 15 சிபிசிஐடி காவலர்களை கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இதனிடையே ஆசிரமத்தில் இருந்து காணாமல் போன ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ஜாபாருல்லா(70) பெங்களூரு ஆசிரமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது தெரிய வந்தது.

இதற்கிடையே, கர்நாடக மாநிலம், பத்ராவதியில் உள்ள ஒரு மசூதியின் முன் இறந்து கிடந்த முதியவர் ஜபருல்லாவாக இருக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தெரிவித்துள்ளது. ஆனாலும், உறுதிப்படுத்தப்படவில்லை.

மேலும் ஆசிரமத்தில் இருந்த, தென்காசி மாவட்டம் சங்கரன் கோயில் பகுதியைச் சேர்ந்த லட்சுமிஅம்மாள் (85), அவரது மகன் முத்து விநாயகம் (48). ஆகியோர் வேறு ஆசிரமத் திற்கும் அனுப்பப்பட்டதும், அவர்கள் உள்ள இடத்தை கண்டுபிடித்து விட்டதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவிக்கின்றனர்.

ஆனாலும் அவர்கள் இருவரும் மீட்கப்படவில்லை. மற்ற 14 பேர் எங்கே என்பதில் தொடர்ந்து மர்மம் நிலவுகிறது. விசாரணை தொடர்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்