வைரஸ் காய்ச்சல் பாதிப்பு: நாளை முதல் 10 நாட்களுக்கு 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை: புதுச்சேரி அரசு

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: வைரஸ் பரவல் காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை நாளை முதல் 10 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஹெச்3என்2 இன்புளுயன்சா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரைத் தான் அதிகம் தாக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடவேண்டும் என்று பேரவையில் கோரிக்கை விடப்பட்டிருந்தது.

இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவையில் கல்வியமைச்சர் நமச்சிவாயம் இன்று (மார்ச். 15) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ''புதுச்சேரியில் வைரஸ் தொற்று பரவி குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் ஆரம்ப பள்ளி முதல் 8 ம் வகுப்பு வரை அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் வரும் 16 முதல் 26 வரை விடுமுறை விடப்படுகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை தரப்பில் கூறுகையில், "புதுச்சேரியில், அனைத்து மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கு என்று பிரத்தியேக புறநோய் சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. எவரேனும் காய்ச்சல் சளி, இருமல் தும்மல் போன்ற அறிகுறிகளோடு மருத்துவமனைக்கு வந்தால் அவர்களுக்கு ஹெச்3என்2 வைரஸ்-க்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் இவ்வகை வைரஸ் தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரி செய்துவிடலாம்" என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்