சங்கரராமன் கொலை வழக்கில் மேல் முறையீடு: புதுவை ஆளுநர் உத்தரவு - தமிழக அதிகாரிகளிடம் நகல் வழங்கப்பட்டது

By செய்திப்பிரிவு

சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் உட்பட 23 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக அதிகாரிகளிடம் இது தொடர்பான உத்தரவு நகல் அளிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளராக இருந்தவர் சங்கரராமன். இவர் கடந்த 2004-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி கோயில் வளாகத்திலேயே படுகொலை செய்யப்பட்டார். கொலை தொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர், விஜயேந்திரரின் சகோதரர் ரகு, அப்பு ஆகியோர் உட்பட 24 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. முதலில், செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. தமிழகத்தில் விசாரணை நேர்மையாக நடைபெறாது என்றும் வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் ஜெயேந்திரர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதன்பேரில் கடந்த 2005-ம் ஆண்டு புதுவை நீதிமன்றத்துக்கு சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. கடந்த 2009-ம் ஆண்டு அரசு வழக்கறிஞராக தேவதாஸ் நியமிக்கப்பட்டார். 189 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இதில் 81 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர். வழக்கு நடைபெறும்போதே குற்றம் சாட்டப்பட்ட கதிரவன் இறந்தார். இந்த நிலையில், வழக்கு விசாரணை முடிந்து கடந்த ஆண்டு நவம்பர் 27-ம் தேதி புதுச்சேரி நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முருகன் தீர்ப்பளித்தார். அப்போது, சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

புதுச்சேரி நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டதால், இந்த வழக்கில் மேல் முறையீடு செய்வதாக இருந்தால் புதுச்சேரி அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய பல தரப்பினர் வலியுறுத்தினர். இதையடுத்து, மேல்முறையீடு செய்ய புதுச்சேரி அரசு தீர்மானித்து, அதற்கான கோப்புகளை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியாவுக்கு அனுப்பி வைத்தது. அந்த கோப்பில் ஆளுநர் கையெழுத்திட்டுள்ளார்.

இது தொடர்பாக, இந்த வழக்கில் அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் தேவதாஸ் கூறும்போது, ‘புதுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ஆளுநர் வீரேந்திர கட்டாரியா ஜூன் 27-ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர் பான உத்தரவு நகல் திங்கள்கிழமை எங்களிடம் தரப்பட்டது. கொலை வழக்கு விசாரணை தமிழகத்தில் நடந்தது. சிபிசிஐடி போலீஸார் குற்றவாளிகளை கைது செய்தனர். எனவே, ஆளுநர் பிறப்பித்துள்ள உத்தரவின் நகலை தமிழக அதிகாரிகள் பெற்று சென்றுள்ளனர். . மேல் முறையீடு தொடர்பாக அனைத்து ஆவணங்களும் தயார் செய்த பிறகு, தலைமை வக்கீல் முருகேசன் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்