தடையை மீறி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்றபோது பெரம்பலூர் அருகே ஹெச்.ராஜா கைது

By செய்திப்பிரிவு

பெரம்பலூர்: தடையை மீறி திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே போலீஸார் நேற்று கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பாஜக சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், இக்கூட்டத்துக்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. ஆனால், தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

இதில் பங்கேற்க பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா நேற்று மாலை காரில் திண்டிவனம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். பெரம்பலூர் மாவட்ட எல்லையான திருமாந்துறை சுங்கச்சாவடி பகுதியில் சென்று கொண்டிருந்த அவரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்ட போலீஸார் கைது செய்தனர்.

அப்போது, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவருடன் வந்த பாஜகவினர் சுமார் 30 பேர் திமுக அரசையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். பின்னர், கடலூர் மாவட்டம் ராமநத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு சமுதாய கூடத்தில் ஹெச்.ராஜாவை போலீஸார் தங்க வைத்தனர்.

முன்னதாக இதுகுறித்து ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியது: நான் திண்டிவனம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மிகவும் அநாகரிகமாக சுவரொட்டி ஒட்டியுள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொடர்ந்து இந்து மதத்தையும், இந்த நாட்டையும் இழிவாக பேசி வருகிறார்.

தமிழகத்தின் வட பகுதியில் 12 மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இனி தினமும் இந்த மாவட்டங்களுக்கு வருவோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்