கோவில்பட்டி: கோவில்பட்டி நகரில் 3 சாலைகள் சந்திக்கும் இளையரசனேந்தல் விலக்கு, மந்தித்தோப்பு சாலை விலக்கு, கால்நடை மருத்துவமனை பேருந்து நிறுத்தம், புதுரோடு சந்திப்பு பேருந்து நிறுத்தம், மாதாங்கோவில் தெரு சந்திப்பு பகுதிகளில் பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்து நெருக்கடி நிலவுகிறது.
கோவில்பட்டியில் முன்பு 10 போக்குவரத்து காவலர்கள், ஒரு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் என, 11 பேர் பணியில் இருந்தனர். கடந்த 2018-ம் ஆண்டு போக்குவரத்து காவலர்கள் எண்ணிக்கை 24 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் போக்குவரத்து காவலர்கள் இடமாறுதல் பெற்றுச்சென்றுவிட்டனர்.
இடமாறுதலில் சென்றவர்களின் இடத்துக்கு வேறு நபர்கள் நியமிக்கப்படாததால், தற்போது 13 போக்குவரத்து காவலர்கள், போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர், உதவி ஆய்வாளர் என, 15 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதில், ஒருவர் எழுத்தராகவும், ஒருவர் மாற்றுப்பணிக்கும் சென்றுவிடுவதால், 11 காவலர்கள் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
அதிலும், கோயில் திருவிழாக்கள், விஐபி பாதுகாப்பு பணி உள்ளிட்ட காரணங்களுக்காக கோவில்பட்டி நகரில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களில் 10 பேர் அவ்வப்போது அனுப்பி வைக்கப்பட்டு விடுகின்றனர். இதனால் நகரில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணி பாதிக்கப்படுகிறது.
» பேரிடரால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.1,816 கோடி மத்திய அரசு நிதியுதவி
» ரூ.1.18 லட்சம் கோடியில் ஜம்மு-காஷ்மீர் பட்ஜெட்: மக்களவையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர்
இதுகுறித்து நகர்மன்ற உறுப்பினர் கே.சீனிவாசன் (மார்க்சிஸ்ட்) கூறும்போது, “கோவில்பட்டியில் போதிய போக்குவரத்து காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். மாவட்டத்தின் 2-வது பெரிய நகரமாக உள்ள கோவில்பட்டியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிடம் பல ஆண்டுகளாக காலியாக உள்ளது.
இளையரசனேந்தல் சுரங்கப்பாதை வழியாக ஒருவழிப்பாதையை முறையாக கடைபிடிக்க வேண்டும். ஆங்காங்கே புறக்காவல் நிலையங்களை செயல்படுத்த வேண்டும். புதிய கூடுதல் பேருந்து நிலையத்தை போதிய வசதிகளுடன், பாதுகாப்புடன் செயல்படுத்த வேண்டும். அங்கிருந்து நகரின் அனைத்து பகுதிகளுக்கும் செல்லும் வகையில் மினி பேருந்து, நகர பேருந்து வசதிகள் செய்து தர வேண்டும்” என்றார்.
சமூக ஆர்வலர் ப.சண்முகசுந்தரம் கூறும்போது, “கோவில்பட்டியில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு இடங்கள் கிடையாது. இதனால், ஆங்காங்கே கடைகளின் முன்பே மக்கள் தங்களது வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். இதற்கு தீர்வு காணப்பட்டாலே போக்குவரத்து நெருக்கடியில் 50 சதவீதம் குறைந்துவிடும்.
மந்தித்தோப்பு விலக்கு, இளையரசனேந்தல் விலக்கு, மாதாங்கோவில் தெரு சந்திப்பு ஆகிய இடங்களில் குறைந்தது 2 போக்குவரத்து காவலர்களை பணியில் அமர்த்த வேண்டும். பீக் ஹவர்ஸ் எனப்படும் காலை, மாலை வேளைகளில் ஊருக்குள் வரும் டிராக்டர், கனரக மற்றும் சரக்கு வாகனங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago