தொழிற்சாலைகள் நூற்றுக்கணக்கில் இருந்தும் தமிழகத்தில் தரமான ‘எம்-சாண்ட்’ பற்றாக்குறை: மின்சாரம், இயந்திரங்களுக்கு மானியம் வழங்குமா அரசு?

By டி.செல்வகுமார்

தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இருந்தபோதி லும் தரமான எம்-சாண்ட் கிடைப்பதில்லை. வெளிமாநிலங்கள் போல, இயந்திரங்களுக்கு மானியம் கொடுத்தால், தரமான எம்-சாண்ட் கிடைக்கும் என்று கட்டுமானத் தொழில் நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் 70-க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் உள்ளன. இருப்பினும் 32 மணல் குவாரி கள் மட்டுமே செயல்படுகின்றன. சுற்றுச்சூழல் பிரச்சினை, நீதிமன்றத் தடை உத்தரவு, உள்ளூர் மக்களின் எதிர்ப்பு போன்ற காரணங்களால் மணல் குவாரிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அரசு உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.

தற்போது அரசே மணல் குவாரிகளை நடத்துவதால் 2 யூனிட் (200 கனஅடி) கொண்ட ஒரு லாரி லோடு ரூ.1,050-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், பல மடங்கு விலை ஏற்றப்பட்டு ஒரு லாரி லோடு ரூ.24 ஆயிரத்துக்கு பொதுமக்களிடம் விற்கப்படுகிறது. லாரிக்கு லோடு கிடைக்க வாரக்கணக்கில் ஆவதால் ஓட்டுநர், கிளீனர் பேட்டா, கடனுக்கான வட்டி, லாரி வாடகை உள்ளிட்ட செலவுகள் காரணமாக மணல் விலை இந்த அளவுக்கு உயர்த்தி விற்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு லாரி லோடு ரூ.45 ஆயிரம் வரைகூட விற்றது குறிப்பிடத்தக்கது. மணல் தட்டுப்பாடுதான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று கட்டுமானத் தொழில் செய்வோர் கூறுகின்றனர்.

“கட்டுமானப் பணிகளுக்கு ஆற்றுமணல் பயன்படுத்தப்படுவது அடுத்த 3 ஆண்டுகளில் நிறுத்தப்படும். வெளிநாடுகள் போல, எம்-சாண்ட் (ஜல்லி துகள்கள்) எனப்படும் செயற்கை மணலை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்’’ என்று மக்களை முதல்வர் கே.பழனிசாமி சமீபத் தில் கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட எம்-சாண்ட் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. ஆனாலும், சில பெரிய நிறுவனங்கள் மட்டுமே இந்திய தர நிர்ணய அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தரமான எம்-சாண்ட் தயாரித்து விற்கின்றன. பெரும்பாலான தொழிற்சாலை கள் தரமான எம்-சாண்ட் தயாரிப்பதில்லை என்று கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அரசு உயர் அதிகாரிகள் கூறியதாவது:

கற்களை மணல்போல சிறு துகள்களாக நொறுக்க விஎஸ்ஐ (Vertical Shaft Impactor) என்ற இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதைக் கொண்டு நொறுக்கினால்தான் எம்-சாண்ட், ஆற்றுமணல் போல இருக்கும். இல்லாவிட்டால், அதைக் கட்டுமானப் பணிக்கு பயன்படுத்த இயலாது. இந்த இயந்திரம் விலை ரூ.1 கோடி. எம்-சாண்டில் உள்ள குவாரி டஸ்ட் எனப்படும் நுண்துகள்களை காற்று உறிஞ்சி இயந்திரம் (ஏர் கிளாஸிஃபயர்) மூலம் அகற்ற முடியும். இதன் விலை ரூ.30 லட்சம்.

இந்த இயந்திரங்களின் விலை அதிகமாக இருப்பதால் 70-க்கும் மேற்பட்ட எம்-சாண்ட் தயாரிப்பு ஆலைகள் இவற்றைப் பயன்படுத்துவது இல்லை. அதனால், பெரும்பாலும் இந்திய தர நிர்ணய அமைப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு எம்-சாண்ட் தயாரிக்கப்படுவதில்லை.

மேலும், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் எம்-சாண்ட் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு மின்சார மானியம், இயந்திரங்கள் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. அதனால் அங்கு நவீன தொழில்நுட்பத்தில் தரமான எம்-சாண்ட் தயாரித்து விற்கப்படுகிறது. அதுபோல தமிழ்நாட்டிலும் மானியம் வழங்கினால், பல தொழிற்சாலைகளும் அந்த இயந்திரங்களை வாங்கும். தரமான எம்-சாண்ட் தயாரிக்கப்பட்டால், மக்களும் நம்பிக்கையோடு வாங்கிப் பயன்படுத்துவர் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்