இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 16 மீனவர்கள், படகை விடுவிக்க நடவடிக்கை: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கடிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 16 பேரையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியகடிதத்தில், ‘‘நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த 12 மீனவர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தை சேர்ந்த 4 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர். இந்த விவகாரத்தில் தலையிட்டு, 16 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை தொடர்வது மிகுந்த கவலைக்குரியதாகும்.

பாஜக ஆட்சியில் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிஇதுவரை நிறைவேற்றப்படவில்லை. கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண் டும்’’ என கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்