சென்னை: புனித ஹஜ் பயணத்துக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான அவகாசம், மார்ச் 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என சிறுபான்மையினர் நலத்துறை செயலர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதியை மார்ச் 20 வரை இந்திய ஹஜ் குழு நீட்டித்துள்ளது.
ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழுவின் www.hajcommittee.gov.in என்ற இணையதளம் வழியாகவோ, மும்பை இந்திய ஹஜ் குழுவின் ‘ஹெச்சிஓஎல்’ என்ற செயலியை கைபேசியில் பதிவிறக்கம் செய்வதன் மூலமோ விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.
விண்ணப்பதாரர்கள் மார்ச்20-ம் தேதி அல்லது அதற்கு முன்வழங்கப்பட்டு குறைந்தது அடுத்தஆண்டு பிப்.3-ம் தேதிவரை செல்லத்தக்க, இயந்திரம் மூலம் படிக்கத்தக்க பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசிபக்கம், வெள்ளை பின்னணியுடன் கூடியசமீபத்திய பாஸ்போர்ட் அளவுபுகைப்படம், குழு தலைவரின் ரத்து செய்யப்பட்ட காசோலை நகல் அல்லது ஐஎப்எஸ்சி குறியீட்டுடன் கூடிய சேமிப்பு வங்கிக் கணக்குபுத்தக நகல், முகவரி சான்றின் நகல்ஆகியவற்றை பதிவேற்றம் செய்யவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு இந்திய ஹஜ் குழு இணையதள முகவரியை பார்க்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
» ஆவணப்பட நாயகர்கள் பொம்மன், பெள்ளிக்கு வனத்துறையினர் வாழ்த்து
» லண்டனில் இந்தியாவை அவமதித்த விவகாரம்: ராகுல் மன்னிப்பு கேட்க பாஜகவினர் வலியுறுத்தல்
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago