சென்னை: சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி நிலுவைத் தொகையை வரும் 31-ம் தேதிக்குள் செலுத்த வேண்டுமென மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மாநகராட்சி முனிசிபல் சட்டத்தின்படி சொத்து வரியை சொத்து உரிமையாளர்கள், ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்தில் முதல் 15 நாட்களுக்குள் செலுத்தவேண்டும்.
அவ்வாறு செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் (ரூ.5 ஆயிரம் வரை) ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தாமதமாக செலுத்தும் சொத்துஉரிமையாளர்கள், தாங்கள் செலுத்த வேண்டிய தொகையுடன் கூடுதலாக 2 சதவீதம் தனிவட்டிசேர்த்து செலுத்த வேண்டும்.
சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியை தங்களது இல்லம் தேடி வரும் அரசு தபால் துறைஊழியரிடம் பிபிபிஎஸ் மூலமாகவும், மாநகராட்சியின் அனைத்துமண்டல அலுவலக வளாகத்திலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் என பல்வேறு வழிமுறைகளில் எளிதாக செலுத்த முடியும்.
» ஆந்த்ரோபோசீன் காலத்துக்கான கார்ல் மார்க்ஸ்
» ஆவணப்பட நாயகர்கள் பொம்மன், பெள்ளிக்கு வனத்துறையினர் வாழ்த்து
2022-23 நிதியாண்டின் 2-ம் அரையாண்டுக்கான சொத்துவரியை கடந்த 9-ம்தேதி வரை 8 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் முழுமையாக செலுத்தியுள்ளனர். மீதமுள்ள 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொத்துவரியை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர்.
நடப்பு நிதியாண்டு முடிவடைய இன்னும் 18 தினங்கள் மட்டுமே உள்ளதால் வரும் 31-ம்தேதிக்குள் சொத்துவரி நிலுவை தொகையை,உரிமையாளர்கள் உடனடியாக செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago