தென்காசி: தென்காசி மாவட்டம், நன்னகரத்தில் உள்ள அம்பேத்கர் சிலையிடம் பாஜக பட்டியல் அணி மாவட்டத் தலைவர் குமார் தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த மனுவில், ‘பட்டியல் சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஒதுக்கும் நிதியை, தமிழக அரசு முறையாக செலவு செய்யாமல் திருப்பி அனுப்புவது வாடிக்கையாக உள்ளது. கடந்த 2021-22-ம் ஆண்டில் மத்திய அரசு ரூ.16,442 கோடி ஒதுக்கியதில் ரூ.10,446 கோடி செலவு செய்யப்படவில்லை.
பட்டியல் சமுதாய மக்கள் இலவச வீட்டுமனைப் பட்டா இல்லாமலும், சுடுகாட்டுக்கு பாதை இல்லாமலும் அவதிப்படுகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்காமல் பின்தங்கி உள்ளனர்.
பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையாத தேக்க நிலை நீடிக்கிறது. மத்திய அரசு ஒதுக்கும் நிதியை தமிழக அரசு செலவு செய்யாமல் பட்டியல் சமுதாய மக்களை ஏமாற்றும் துரோகத்தை முறையிடுகிறோம்’ என்று கூறியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago