போராட்டக்காரர்களை ஒருங்கிணைக்கும் தளங்களில் ஒன்றாக சமூக வலைதளம் மாறி வருகிறது. இவற்றை போலீஸார் கண்காணித்து வருகின்றனர். இதைக் கண்காணிக்க தனிப்பிரிவு ஒன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.
மருத்துவப் படிப்பு கனவு பறிபோனதைத் தொடர்ந்து அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத் தியது.
இதன் எதிரொலியாக தலை நகரம் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் நேற்று முன்தினம் மட்டும் 23 இடங்களில் சாலை மறியல், போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த 105 பெண்கள் உட்பட 760 பேர் கைது செய்யப்பட்டனர். 42 இடங்களில் 233 பெண்கள் உட்பட 1,261 பேர் நினைவேந்தல் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.
போலீஸ் பாதுகாப்பு
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மெரினாவில் தடையை மீறி போராட் டம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணை யர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்து இருந்தார்.
போராட்ட ஒருங்கிணைப்புகள், அறிவிப்புகள் போன்றவை பெரும்பாலும் வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டரில் பகிரப்பட்டு வருகின்றன. இதற்காக, பெண் ஆய்வாளர் தலைமையில், சமூக வலைதளங்களைக் கண்காணிக்க தனிப்பிரிவு உருவாக் கப்பட்டுள்ளது.
இந்தப் பிரிவு போலீஸார் காவல் ஆணையரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளனர். சமூக வலைதளங்களில் பகிரப்படும் போராட்ட அறிவிப்புகள், அரசுக்கு எதிரான கருத்துகள் போன்றவற்றை உடனுக்குடன் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் தெரிவிக்கின்றனர். அவர் உடனடியாக பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்து வருகிறார்.
இதுகுறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, “சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய கடமை போலீஸாருக்கு உள்ளது.
திடீர் போராட்டம், ஆர்ப்பாட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. இவற்றைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
அதன் ஒரு பகுதிதான் சமூக வலைதளங்களைக் கண்காணிக் கும் பிரிவு. இந்தப் பிரிவு போலீஸார் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்களைக் கண்காணித்து அதுகுறித்த தகவல்களைக் காவல் ஆணையருக்குத் தெரிவிக்கின்றனர். அதன்படி, அடிப்படையிலும் உளவுப் பிரிவு, நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் அளிக்கும் தகவலின் அடிப்படையிலும் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
3 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago