காவல் துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் செல்லாது: ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: நன்னடத்தைப் பிரமாணத்தை மீறும் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை விதிக்க காவல் துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளிடம் காவல் துறையினர், எந்தக் குற்றத்திலும் ஈடுபடமாட்டோம் என காவல் துறையினர் நன்னடத்தைப் பிரமாணம் பெறுவதுண்டு. இந்த நன்னடத்தைப் பிரமாணத்தை மீறுவோரை சிறையில் அடைக்க காவல் துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு, கடந்த 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் அரசாணை பிறப்பித்திருந்தது.

இதன்படி நன்னடத்தைப் பிரமாணத்தை மீறியதாக சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இருவேறு விதமாக தீர்ப்பளித்தனர். இது சம்பந்தமான சட்டக் கேள்விக்கு விடை காண நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது.

இந்த வழக்குகள் சிறப்பு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "நன்னடத்தைப் பிரமாணத்தை மீறுவோரை சிறையில் அடைக்க காவல் துணை ஆணையர்களுக்கு அதிகாரம் வழங்கி பிறப்பிக்கப்பட்ட இரு அரசாணைகளும், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று அறிவித்தனர்.

மேலும், நீதித் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் அதிகாரத்தை காவல் துறையினர் பயன்படுத்த முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த இரு அரசாணைகளும் அமலுக்கு வருவதற்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். நன்னடத்தைப் பிரமாணத்தை மீறுவோருக்கு எதிராக குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்" எனவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்