சென்னை: அதிக குற்றங்கள் நடக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளைப் போன்று தமிழகத்தை திமுகவினர் மாற்றிக் கொண்டிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "திமுக கவுன்சிலர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதை தங்களது முழு நேர தொழிலாக கொண்டுள்ளார்களா என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. பொன்னேரி 17 வது வார்டு கவுன்சிலர் இளங்கோ, ஒரு குடும்ப பிரச்சினையில் தலையிட்டு, வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
அடி வாங்கியவர்கள் காவல்துறையில் புகார் அளித்தும் திமுக கவுன்சிலர் இதில் ஈடுபட்டுள்ளதால், நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் மறுத்திருக்கின்றனர். காவல் துறையினரின் அலட்சியமும் திமுக கவுன்சிலரின் வன்முறை வெறியாட்டமும் இன்று கொலையில் முடிந்திருக்கிறது.
தங்கள் கட்சியினர், தமிழகத்தை உலகின் அதிகம் குற்றம் நடக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகள் போன்று மாற்றிக் கொண்டிருப்பதை இன்னும் எத்தனை நாள் கண்டும் காணாமல் மௌனமாக இருப்பீர்கள், மு.க.ஸ்டாலின்" இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.
» அதிமுகவில் இணைந்தார் அமமுக இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர்
» கரோனா பாதிப்பு அதிகரிப்பு | மாணவர்கள் அச்சப்பட வேண்டாம்: மா.சுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago