கரோனா பாதிப்பு அதிகரிப்பு | மாணவர்கள் அச்சப்பட வேண்டாம்: மா.சுப்பிரமணியன்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவது குறித்து மாணவர்கள் அச்சப்பட வேண்டாம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்டராமர் கோவில் குளத்தை ஆய்வு செய்த பின் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "நாடு முழுவதுமே கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்றைய பாதிப்பு 40 ஆக அதிகரித்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த 27 வயது இளைஞர் கரோனோ தொற்றால் உயிரிழந்துள்ளார். ஆனால் அவருக்கு பல்வேறு இணை நோய் பாதிப்புகள் இருந்தன.

தமிழகத்தில் தற்போது பரவும் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். குறிப்பாக பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் காய்ச்சல் குறித்து அச்சப்படத் தேவை இல்லை. மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க 104 என்ற உளவியல் ஆலோசனை மையத்தை அவர்கள் அணுகலாம்" என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE