சென்னை: தமிழகத்தில் புதிய வகை கரோனா பரவுகிறதா என்பதை கண்டறிய நோயாளிகளின் சளி மாதிரிகள் மரபணு பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கரோனா தொற்று பாதிப்பு இரட்டை இலக்கத்தில் பதிவாகி வருகிறது. நேற்று முன்தினம் தமிழகத்தில் தினசரிதொற்று பாதிப்பு 40-ஐ தாண்டிவிட்டது.
இதற்கிடையே இந்தியா முழுவதும் இன்ஃப்ளூயன்சா ஏ வகை வைரஸான எச்3என்2 தொற்று பரவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்தியஅரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்திஉள்ளது. அதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகத்தில் கரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கும், பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில்வசிப்போருக்கும் கரோனா பரிசோதனைகள் அறிகுறிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழகத்தின் பொது சுகாதாரத் துறை வளாகத்தில் மரபணு பகுப்பாய்வு ஆய்வகம்அமைக்கப்பட்ட பிறகு கரோனாவைரஸின் வகையை அறிவதற்கான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. புதிய வகை வைரஸ் பரவுகிறதா என்பதை கண்டறிய, பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளைச் சேர்ந்த கரோனா நோயாளிகளின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவற்றின் மரபணு பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
7 mins ago
தமிழகம்
12 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago