சிவகங்கையில் இபிஎஸ் வரவேற்பு பேனர்கள் கிழிப்பு: பதற்ற சூழலால் விடிய விடிய போலீஸ் ரோந்து

By இ.ஜெகநாதன்


சிவகங்கை: சிவகங்கையில் அதிமுக இடைக் காலப் பொதுச்செயலாளர் பழனிசாமியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்களை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர்.

பழனிசாமி பொதுக்கூட்டம் நடைபெறும் அதே நாளில் ஓபிஎஸ் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சிவகங்கையில் நேற்றிரவு அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்றார்.

முன்னதாக கட்சி நிர்வாகிகள் சார்பில் மதகுபட்டியில் இருந்து சிவகங்கை வரை திருப்பத்தூர் சாலையின் ஓரங்களில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் இரவு அந்த பேனர்களை சிலர் கிழித்து சேதப் படுத்தினர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் பேனர் கிழிப்பு சம்பவங்கள் நடந்ததால் பதற் றமான சூழ்நிலை நிலவியது.

இதையடுத்து போலீஸார் விடிய விடிய ரோந்து பணியில் ஈடு பட்டனர். சிவகங்கை பேருந்து நிலையத்தில் அனுமதி பெறாமல் அதிமுக நிர்வாகிகள் வைத்திருந்த பேனர்களை போலீஸார் அகற்றினர். அதே நேரத்தில் சிவ கங்கை, திருப்பத்தூர், மானா மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பழனிசாமியை கண்டித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர்.

ஓபிஎஸ் அணியினர் ஆர்ப்பாட்டம்: பழனிசாமியை கண்டித்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நேற்று காலை சிவகங்கை ஆட்சி யர் அலுவலகம் முன் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓபிஎஸ் அணி மாவட்டச் செய லாளர் அசோகன் தலைமை வகித்தார். கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பழனி சாமியை கண்டித்து கருப்பு பலூன்களை பறக்க விட்டனர்.

பின்னர் மருது அழகுராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவை பிளவு படுத்த பழனிசாமியை திமுக பயன்படுத்துகிறது. சசிகலா, ஓபிஎஸ்-க்கு நம்பிக்கை துரோகம் செய்தவர் பழனிசாமி. அவருக்கு ஆதரவு அளித்தார் அண்ணாமலை. தற்போது தான் அண்ணாமலைக்கு பழனிசாமியின் துரோகம் தெரிந் திருக்கும் என்று கூறினார்.

நீதிமன்றத்தில் அவசர மனு: இதனிடையே பழனிசாமி பங் கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு கூடு தல் போலீஸ் பாதுகாப்பு கேட்டு சிவகங்கை மாவட்ட அதிமுக செயலாளர் செந்தில்நாதன் சார்பில், அவரது வழக்கறிஞர் ஆனந்த்ராஜ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று அவசர மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஜி.இளங்கோவன் காணொலி மூலம் விசாரித்தார்.

அரசு வழக்கறிஞர் வாதிடு கையில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சில இடங்களில் பேனர்களை சேதப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை. பொதுக்கூட்டத்துக்கு தேவையான போலீஸ் பாதுகாப்பு அளிக்கப் பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து அதிமுக பொதுக்கூட்டத்துக்கு கூடுதல் பாதுகாப்பு கோரும் மனுவை சிவகங்கை டிஎஸ்பி பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்