108 நாதஸ்வர, தவில் வித்வான்கள் இசையுடன் துவங்கியது யாதும் தமிழே

By மு.அப்துல் முத்தலீஃப்

 

தி இந்து’ தமிழ் நாளிதழின் 5-ம் ஆண்டு தொடக்கநாளை கொண்டாடும் வகையில் ‘யாதும் தமிழே’ என்ற பெயரில் 2 நாள் விழா சென்னையில் இன்று தொடங்குகிறது.

‘தி இந்து’ குழுமத்தில் இருந்து வெளிவரும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ், செப்டம்பர் 16-ம் தேதியுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்து 5-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதைக் கொண்டாடும் விதமாக ‘யாதும் தமிழே’ என்ற பெயரில் 2 நாள் விழா, சென்னை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் உள்ள சர் முத்தா கான்செர்ட் ஹாலில் இன்று (செப்.15) மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.

முதல் நாள் நிகழ்ச்சியில்..

முதல் நாள் தொடக்க நிகழ்ச்சியில் கலை, இலக்கியம், கல்வி, தொழில்நுட்பம், ஆய்வு ஆகிய துறைகளில் சிறந்த ஆளுமைகளுக்கு 2017-ம் ஆண்டின் ‘தமிழ் திரு’ விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிக்கு ஹைதராபாத் உயர் நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் தலைமை வகித்து சிறப்புரையாற்றுகிறார். நடிகர் கமல்ஹாசன் விருதுகளை வழங்கி பேசுகிறார்..

நிகழ்ச்சி துவங்குவதற்கு முன் முதல் நிகழ்ச்சியாக மயிலை வெங்கடேசன் தலைமையில் 108 நாதஸ்வரம் தவில் வித்வான்கள் பங்கேற்ற இசை நிகழ்வுடன் மங்களகரமாக நிகழ்ச்சி துவங்கியது. 54 நாதஸ்வரம், 54 தவில் கலைஞர்கள் இன்னிசையுடன் நிகழ்ச்சி துவங்கியது.விழாவை காண பொதுமக்கள் ஆர்வத்துடன் விழா அரங்கில் குவிந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்